சர்பட்டா நடிகரிடம் பாகிஸ்ங் கற்கும் ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ (மிஸ்கின் படத்துக்கா இருக்குமோ)

0
24134
andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

-விளம்பரம்-
Meet Your Favourite Boxers In Sarpatta Parambarai

ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.மேலும், வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : சூர்யாவின் வருமான வரி விவாகரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு – எச் ராஜாவின் பதிவால் கடுப்பான சூர்யாவின் ரசிகர்கள்.

- Advertisement -

தற்போது இவர் மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் இவர் அரை நிர்வாண காட்சியில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சார்பட்டா பரம்பரை நடிகரிடம் பாக்சிங் பயிற்சியை கற்றோக்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியான சார்பட்டா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பலர்பிரபலமடைந்தனர் .அந்த வகையில் இந்த படத்தில் ராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். மற்ற நடிகர்களை போல இவருக்கும் சார்பட்டா படத்திற்காக பாக்சிங் பயிற்சி மேற்கொண்டார். இப்படி ஒரு நிலையில் இவரிடம் நடிகை ஆண்ட்ரியா பாக்சிங் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement