சார் உங்க கூட தான முதலில் நடித்தேன் – ஆண்ட்ரியா பகிர்ந்த தனது உருக்கமான புகைப்படம்.

0
6911
andrea
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர்.

இதையும் பாருங்க : இயக்குனருடன் காதல், வீட்டை எதிர்த்து நடுக்கடலில் திருமணம் செய்துகொண்டுள்ள திரௌபதி பட நடிகை.

- Advertisement -

இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல சமூக வலைதளத்தில் விவேக் பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகையான ஆண்ட்ரியா முதன் முதலில் நடித்த விளம்பரம் தற்போது வைரலாக பிறவி வருகிறது. ஆண்ட்ரியா முதல் முதலில் நடித்த விளம்பரத்தில் அவருக்கு ஜோடியே விவேக் தான். இதனை ஆண்ட்ரியாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement