பூவே உனக்காக படத்தின் கிளைமாக்ஸ் இது தான் – ஆனால், கடைசியில் மாத்திட்டாங்க. அஞ்சு அரவிந்த் அளித்த பேட்டி.

0
3490
poove
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கிறது அவ்வளவு ஏன் காதல் கோட்டை படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சியில் இறுதியில் அஜித் மற்றும் தேவையான சந்திக்காமலே சென்று விடுவார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ் ஆக இருந்தது ஆனால் அதன் பின்னர்தான் அந்த படத்தில் அஜித் மற்றும் தேவயானி சேருவது போல காட்சிகள் அமைக்கப்பட்ட தான் அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 96 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கூட இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் தானம் இதனை அந்த படத்தில் நடித்த நடிகையை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்

-விளம்பரம்-

விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த ஏழு படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை ஆனால் இந்த படம் தான் விஜயின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது இந்த படத்தில்தான் விஜய்யை ஒரு முழு நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு படமாக அமைந்திருந்தது இந்த படத்தில் விஜய் சங்கீதா சார்லி நம்பியார் நாகேஷ் மலேசியா வாசுதேவன் சுகுமாரி என்று எண்ணற்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த படத்தில் விஜய்யின் ஒன்சைடு காதலியாக நடித்தவர் நடிகை அஞ்சு அரவிந்த்.

- Advertisement -

சினிமாத்துறையில் 1991 ஆம் ஆண்டு “வேனு கனவு ” என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.பின்னர் திரை உலகிற்கு வந்த உடன் பல துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.அதன் பின்னர் தமிழில் அருணாச்சலம், ஒன்ஸ்மோர், எனக்கு ஒரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு அரவிந்த். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அஞ்சு அரவிந்த் பூவே உனக்காக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.

வீடியோவில் 19 : 31 நிமிடத்தில் பார்க்கவும்

இதுகுறித்து பேசியுள்ள அவர், அந்தப் படத்தின் கிளைமாக்ஸை எடுக்கும் வரை அந்த படத்தின் கிளைமாக்ஸ் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அந்த படத்தின் கிளைமாக்சின் இறுதியில் விஜய், சங்கீதாவை கல்யாணம் செய்வது போலத்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் வந்த அந்த கிளைமாக்ஸ் எனக்கே தெரியாமல் நடைபெற்ற கிளைமாக்ஸ் என்று கூறியிருக்கிறார் அஞ்சு அரவிந்த். ஒரு வேலை விஜய்யும் சங்கீதாவும் கிளைமாக்ஸில் இணைந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும். உங்கள் கருத்து என்ன.

-விளம்பரம்-
Advertisement