எப்பா, மாங்கனியா இது ? படத்துல கூட இவ்ளோ கிளாமர் காண்பிச்சது இல்லையேபா.

By Rajkumar · 16/3/2021

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர். இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : சர்ச்சை போட்டோ ஷூட்டுக்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா ? முதல் முறையாக மனம் திறந்த பவித்ரா.

நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின்னர் அம்மணி வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, ஜோதி கிருஷ்ணா என்று இயக்குனருடன் அனு இம்மானுவேலுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருடன் டேட்டிங் சென்று வருதாகவும் தெலுங்கு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கு சினிமாவில் மஞ்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த போது தான் இவருக்கும் இந்த படத்தை இயக்கிய ஜோதி கிருஷ்ணாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது இருவரும் காதலில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, பிரபல தயாரிப்பாளரான எம் ரத்னத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full