சர்ச்சை போட்டோ ஷூட்டுக்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா ? முதல் முறையாக மனம் திறந்த பவித்ரா.

0
6294
pavitra

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

சொல்லப்போனால் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதில் பவித்ராவும் ஒருவர். நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : நான் என்ன பணமா கேட்டேன், அஜித்தை நேரில் சந்திக்க சென்று அசிங்கப்பட்டுள்ள வரலாறு பட பிரபலம்.

- Advertisement -

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் புடவையை கிழித்துக்கொண்டு நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.

வீடியோவில் 4 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

இதை பார்த்த பலரும் பவித்ராவா இது என்று ஆச்சரியப்பட்டனர். சமீபத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டிங்கில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் இந்த போட்டோ ஷூட் குறித்து கேட்க, அதற்கு பதில் அளித்த பவித்ரா, ஆம், அது நான் தான். அது 2.5 வருசத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ ஷூட். ஒரு கமர்சியல் விஷயத்திற்காக அதை பண்ணோம். ஆனால், அது முடிந்தவுடன் அனைவரும் அந்த புகைப்படத்தை நீக்கி விட்டோம். ஆனால், திடீரென்று அது வைரல் ஆகி விட்டது அதை பற்றி நான் எதுவும் நியாயப்படுத்த விரும்பவில்லை ஏனென்றால் அந்த போட்டோ ஷூட்டை நடத்தியது நான்தான் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement