என்ன மாங்கனி இதெல்லாம், வாய்ப்பு இல்லையா – அனு இம்மானுவேலின் முதல் கிளாமர் போட்டோ ஷூட்.

0
13008
anu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர். இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவர் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான ரோலில் நடித்து இருந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களா இது என்று வியந்துபோய்யுள்ளனர். என்ன வாய்ப்பு இல்லையா என்றும் என்ன மாங்கனி இதெல்லாம் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement