கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர் அனுஸ்கா சர்மா மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இருவரும் இந்தியாவின் சினிமா மற்றும் கிரிக்கெட் துறையில் மிகச்சிறந்த நபர்கள் ஆவார்.
இதில், அனுஸ்கா சர்மா பாலிவுட் திரைப்படங்களான ஹிந்தி மொழியில் முன்னணி நடிகர்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கான் ஆகியோருடன் நடித்துள்ள மிக முன்னனி நடிகை ஆவார். தற்போது 29 வயதான அனுஸ்கா கிட்டதட்ட கடந்த 10 வருடங்களாக பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை மொத்தம் ஹீரோயினாக மட்டும் 18 படங்கள் நடித்துள்ளார்.
இதில் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது ₹ 10 கோடி சம்பளமாக பெறுகிறார் அனுஸ்கா. இது போக விளம்பரத்தில் வரும் வருமானம் தனி.
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தது ₹ 4 கோடி சம்பளமாக வாங்குகிறார் அனுஸ்கா. ரூ.5 கோடியில் பி.எம்.டபுள்யு, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் ரகங்களில் 4 வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன.
கடைசி 3 வருடத்தில் இவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் மேலும் 30 சதவீதம் உயரும் என்று கூறப்படுகிறது. அதே, போல மும்பை பாந்தரா பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ₹ 10 கோடி மதிப்புள்ள 3 வீடுகள் வாங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்திருக்கும்.
இதனால் மொத்தமாக, அனுஸ்கா சர்மாவின் சொத்து மதிப்பு மட்டும் மொத்தம் ₹ 220 கோடி இருக்கும் எனக் கூறபடுகிறது. இது போக தற்போது கணவர் விராட் கோலியின் வருமானத்தை சேர்த்தால் இவர்களது மொத்த சொத்து மதிப்பு ₹ 1000 கோடியை தொட்டுவிடும்.