செஞ்ச ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் வீன் – இதுவரை இல்லாத அளவு படு குண்டாக மாறியுள்ள அனுஷ்கா.

0
16987
anushkashetty

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.

அனுஷ்கா அவர்கள் அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இதையும் பாருங்க : 2k மருமகள் மீது அளிக்கப்பட்ட புகார். போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை. இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு தெரியுமா ?

- Advertisement -

இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மீண்டும் சென்ற வண்ணம் இருந்தன. ஆனால், தற்போது அம்மணிக்கு மீண்டும் உடல் எடை கூடியுள்ளது. சமீபத்தில் அனுஷ்காவின் சில லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

அதில் ஸ்லிம் தோற்றத்தில் மாறி இருந்த அனுஷ்கா மீண்டும் கொழு கொழுவேன பப்லி தோற்றத்திற்கு மாறி இருந்தார்.தற்போது மீண்டும் ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.இது ஒருபுறம் இருக்க சில ஆண்டுகளாகவே அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாஸ்ஸுக்கும் காதல் என்று சமூக வலைத்தளங்களில் பல கிசுகிசுக்கள் வந்தது. இதை இருவரும் மறுத்து விட்டார்கள். பின் அனுஷ்கா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

-விளம்பரம்-
Advertisement