சுந்தர் சியுடன் தொடர்பா – விளக்கமளித்த SMS பட நடிகை. இதனால் தான் திருமணம் செய்யலையாம்

0
481
- Advertisement -

விஜய் ஆண்டனி- ஜீவா உடன் உறவில் இருப்பது குறித்து பரவிய சர்ச்சைகளுக்கு நடிகை அனுயா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே திரை உலகில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள் நடிகர், நடிகைகள். அதில் சிலர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. அந்த வரிசையில் நடிகை அனுயாவும் ஒருவர். இவர் துபாயில் பிறந்தவர். பூனேவில் இவர் தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதோடு இவர் நடிப்பு சம்பந்தமான படிப்பை கூட படித்திருக்கிறார். அதற்குப் பிறகு அனுயா தமிழில் 2009 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மனசுல பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் அனுயாவுக்கு தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தது.

- Advertisement -

நடிகை அனுயா திரைப்பயணம்:

அதற்குப் பிறகு அனுயா நிறைய படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. மேலும், கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அனுயா துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தி இருந்தது. பிரபல லீக்ஸ் பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் அனுயா ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை கூகுளில் ரசிகர்கள் மீண்டும் தேட தொடங்கி இருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுயா:

இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார். பின் இவர் சில வெப் தொடரில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் பல நடிகர்களுடன் ரகசியமாக உறவில் இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்திருக்கிறது.

-விளம்பரம்-

நடிகை அனுயா வீடியோ :

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை அனுயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய தந்தை துபாயில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். என்னுடைய அம்மா துபாயில் பிறந்து வளர்ந்தவர் தான். சமீப காலமாக சோசியல் மீடியாவில் நான் பல நடிகர்களுடன் தொடர்பில் இருப்பதாக வதந்திகள் வருகிறது. குறிப்பாக, விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர் சி போன்ற பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் நான் உறவில் இருப்பதாக செய்திகள் எல்லாம் வருகிறது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுயா:

இது எல்லாமே வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் மட்டுமே. நான் பிரதமர் மோடியை போல சிங்கிள் நாயகியாக தான் வலம் வருகிறேன் என்று கூறியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்கிறதற்கு அனுயா, என்னை சுற்றி உள்ள ஆண்கள் சரியில்லை என்று பதில் அளித்து இருக்கிறார். தற்போது இவர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement