2 வயது மகளுக்கு தாயக இருக்கும் அசின், இப்போ எப்படி இருகாங்க பாருங்க. வியந்து போன ரசிகர்கள்.

0
10125
asin
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்த பல்வேறு நடிகைகள் தற்போது திருணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர். அந்த வகையில் பல இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்த அசினும் ஒருவர். தமிழ் சினிமா மலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகளை இறக்குமதி செய்துள்ளது, அப்படி வந்த நடிகைகளில் நடிகை அசின் மிகவும் தரமான நடிகை என்று கூட சொல்லலாம். மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நரேந்திரன் மக்கன் ஜெயகாந்தன் வக்கா ‘ என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் நடிகை அசின்.

-விளம்பரம்-
அசின் லேட்டஸ்ட் புகைப்படம்

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். ஆனால், அங்கு பெரிதாக வர முடியததால் அம்மணி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு 2 வயதில் மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

#Throwback to last year, 1st Onam as parents 🙂

A post shared by Asin Thottumkal (@simply.asin) on

அதில் ஸ்லிம் லுக்கில் பழைய அழகு மாறாமல் இருக்கிறார் அசின். பொதுவாக பல்வேறு நடிகைகள் குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவு மாறி விடுவார்கள். ஆனால், இரண்டு வயது குழந்தைக்கு தாயான பின்னரும் தற்போது அசின் முன்பை போலேவே படு ஸ்லிம்மான அதே தோற்றத்தில் இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் வியந்து போய் இருக்கின்றனர். பேசாம இவங்க மீண்டும் நடிக்க வந்துடலாம்.

-விளம்பரம்-
Advertisement