3 வயதிலே பாரம்பரிய கலை பயிற்சியை துவங்கிய அசின் மகன். வைரலாகும் புகைப்படம். (இது அவங்க கலாச்சாரமாச்சே)

0
4315
asin-husband
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்த பல்வேறு நடிகைகள் தற்போது திருணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர். அந்த வகையில் பல இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்த அசினும் ஒருவர். தமிழ் சினிமா மலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகளை இறக்குமதி செய்துள்ளது, அப்படி வந்த நடிகைகளில் நடிகை அசின் மிகவும் தரமான நடிகை என்று கூட சொல்லலாம். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

ஷாம் மற்றும் விஷால் நடித்த ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஷாம் ஜோடியாக அறிமுமானார். அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.தமிழில் அசின் நடித்த கஜினி திரைப்படம் இந்தியில் அமீர் கான் நடிப்பில் வெளியானது. அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து இந்தி படத்தில் கவனம் செலுத்தி வந்தார் அசின்.ஆனால், அந்த படங்கள் அனைத்தும் பெரும் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இதனால் அசினுக்கு இந்தியில் மார்க்கட் தமிழில் மீண்டும் நுழைய முயன்றார் அதன் பின்னர் தமிழும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார் அசின்.பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது.

Actress Asin daughter Arin Rayn 3rd Birthday Celebration | Actress Asin  Family - YouTube

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது மகளின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடினார் அசின். இந்நிலையில் தற்போது 3 வயதாகும் அசினின் மகள் அரின் கதக் நடனத்தை கற்று வருவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அசின். மேலும் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகை அசின் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அதே போல கதகளி கேரளாவின் பாரம்பரிய கலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-
Advertisement