கடந்த அக்டோபரில் கைது, இந்த அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துள்ள பாபிலோனாவின் சகோதரர்.

0
610
- Advertisement -

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்மமான முறையில் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாபிலோனா. தமிழில் தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம் போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் பிட்னஸ் ட்ரைனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாபிலோனா சினிமாவில் இருந்து விலகி கணவர், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். அதோடு பாபிலோனாவின் அம்மாவும் ஒரு நடிகை ஆவார்.

- Advertisement -

பாபிலோனா சகோதரர்:

இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். மாயாவின் மகன் மற்றும் பாபிலோனாவின் தம்பி தான் விக்கி என்ற விக்னேஷ்குமார். இவர் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில் வசித்து வந்தார். போதைக்கு அடிமையான இவர் சில ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் போதைக்காக காசு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

விக்கியை தாக்கிய மர்ம நபர்கள்:

அதோடு இவர் பல பிரச்சனைகளில் சிக்கி கைதும் ஆகி இருந்தார். அதிலும் கடந்த ஆண்டு கூட விக்கியின் வீட்டிற்குள் திடீரென மர்ம நபர்கள் புகுந்து விக்கியை சராமாரியாக கத்தியால் தாக்கியதில் விக்கி பலத்த காயமடைந்தார். பின் விக்கியை உடனடியாக அக்கம் பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். இதற்கு காரணம், விக்கி போதையில் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு இருந்தார். அதனால் தான் அந்த பகுதி மக்கள் விக்கியை தாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விக்கி மரணம்:

அதற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு கூட விக்கி போதையில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு இருந்தார். இப்படி விக்கி மீது பல வழக்குகள் இருக்கிறது. இந்த நிலையில் பாபிலோனாவின் சகோதரர் விக்கி மர்மமான முறையில் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விக்கி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை;

இவருடைய உடலை போலீசார் மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதனை அடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது. விக்கி ஒரு ரவுடி என்பதால் இவரை யாரேனும் முன்விரோத காரணமாக கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது. மேலும், தொடர்ந்து தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள். அதோடு பாபிலோனா இவரின் உடன் பிறந்த சகோதரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement