திருமண வாழ்க்கை ஓராண்டு நிறவு.! புகைப்படத்தை பதிவிட்ட பாவனா.! கண்டு வியந்த ரசிகர்கள்.!

0
697
Bhavana

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை  பாவனா.அதன் பின்னர்  தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாலப் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த கேஸ் தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.

அதன் பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம்  தேதி பாவனாவின் நீண்ட நாள் காதலன் நவீன் என்ற திரைப்பட தயாரிப்பாளருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் பாவனா. 

தற்போது தமிழில் ஹிட்டடித்த 96 படத்தின் கன்னட ரீ மேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை தனது
முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் பாவனா. தற்போது அந்த குவிந்த வண்ணம் இருக்கிறது.