ரஜினி கமலுடன் நடித்த பிந்து கோஷ்...! இன்று 1,500-ரூபாய்க்கு கையேந்தும் அவலம்.!

By Ajju · 15/9/2018
தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாகவும் டான்ஸராகவும் கலக்கியவர், பிந்துகோஷ். செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தவர், தைராய்டு பிரச்னை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார். அவரின் நிலைகுறித்து சில மாதங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது, பிந்துகோஷ் எப்படி இருக்கிறார்? தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். "முந்தைய நிலைமைக்கு இப்போ ரொம்பப் பரவாயில்லை. முன்னாடி உடல்நிலை சரியில்லாமல், மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு. அப்போதான் என்னைப் பேட்டி எடுத்து, ஆனந்த விகடனில் வெளியிட்டீங்க. நடிகர் விஷால் உதவி செய்றதா சொன்னார். அதன்படி, அவரின் தனிப்பட்ட முறையில் மாதந்தோறும் 2,500 ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 1,500 ரூபாயும் கிடைக்குது. இப்படி நாலு மாதமாக உதவித்தொகை கிடைச்சிருக்கு. இருதரப்பினருக்கும் ரொம்ப நன்றி. இருதயம், கண், கல்லீரல், மூட்டுவலினு பாதிக்கப்பட்டிருக்கேன். இதுக்காக, தனித்தனியே மூணு டாக்டர்கள்கிட்ட சிகிச்சைக்குப் போறேன். மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. பொருளாதார நெருக்கடி மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் ரொம்பவே வேதனையில் இருந்தேன். இப்போ, கிடைக்கும் 4,000 ரூபாயால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன். சாப்பாடு, வீட்டு வாடகை என மற்ற செலவுகளை என் ரெண்டு பிள்ளைகள் கவனிச்சுக்கிறாங்க. தனிமையில் வாழும் எனக்கு, தோழியும் நடிகையுமான கோவை சரளா நேரில் சந்திச்சு ஆறுதல் சொன்னாங்க. சினிமா நண்பர்களாவது அப்பப்போ சந்திச்சு, ஆறுதலா சில வார்த்தைகள் பேசினால் சந்தோஷப்படுவேன். என் மனப்பிரச்னையும் சரியாகும்" என உருக்கமாகப் பேசுகிறார், நடிகை பிந்துகோஷ்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full