நடிகைக்கு காதல் மிரட்டல். ராகவா லாரன்ஸ் தம்பி மீது நடிகை புகார்.

0
32241
ragavalawrance
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு பேய் படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

-விளம்பரம்-
Image result for raghava Lawrence Brother Elvin

- Advertisement -

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவருடைய படங்கள் பிரபலமானவை. மேலும், தெலுங்கில் உள்ள பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட். இந்நிலையில் ராகவா லாரன்ஸின் தம்பி காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்கிறார் என்று துணை நடிகை போலீசில் புகார் அளித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ராகவா லாரன்சின் தம்பி எல்வின் எனும் வினோத் ஆவார். இவர் ராகவா லாரன்ஸின் படங்களில் பாடலுக்கு வந்து நடனமாடி இருப்பார். நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

இதையும் பாருங்க : நீ உண்மையாவே விஜய் ரசிகரா ? வீடியோவிற்கு ரசிகரின் கமன்ட்டால் கடுப்பான அபிராமி.

இந்த நிலையில் எல்வின் தெலுங்கு திரைப்படத்தில் நடித்த போது துணை நடிகை ஒருவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டு உள்ளது. அதிலிருந்து அந்த நட்பை இவர் காதலாக மாற்றினார். பின் இவர் அந்த துணை நடிகையை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்து வந்து உள்ளார். எல்வின் தொடர்ந்து அந்த நடிகைக்கு தொல்லை கொடுத்து வந்து உள்ளார். அவரின் தொல்லை பொறுக்க முடியாமல் அந்த துணை நடிகை போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால், எல்வின் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தன்னை ஜெயிலில் அடைத்ததாக அந்த துணை நடிகை புகார் ஒன்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Image result for raghava Lawrence Brother Elvin

மேலும், சிறையில் இருந்த போதே எல்வின் தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், போலீசாரும் அதற்கு துணையாக செயல்பட்டதாகவும் துணை நடிகை கூறியுள்ளார். இவர் இப்படிக் கூறிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தெலுங்கானா முதலமைச்சர் தனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று துணை நடிகை சோசியல் மீடியாவில் கண்கலங்கி கூறியுள்ளார். துணை நடிகையின் இந்த பகிரங்க குற்றச்சாட்டு டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement