’சார்பட்டா பரம்பரை’ துஷாரா அப்பா யார் தெரியுமா? திமுகவில் இவ்வளவு பெரிய புள்ளியா?

0
1171
dushara
- Advertisement -

சார்பட்டா பரம்பரை நடிகை துஷாரா விஜயன் அப்பாவுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படத்தின் மூலம் ஆர்யாவின் திரைப்பயணம் மாறியது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். ஆனால், இந்த படத்தில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டுகளை பெற்றது.

- Advertisement -

பலரும் சார்பட்டா பரம்பரை படம் தான் துஷாரா விஜயன் முதல் படம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால், இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக பேசவில்லை. அதனை தொடர்ந்து இவர் பல குறும்படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும், இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். பின் சர்பட்டா பரம்பரை கலைஞரும் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் துஷாரா விஜயன். இதனை தொடர்ந்து தற்போது இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ என்ற படத்தில் நடித்து வருகிறது. இந்த நிலையில் துஷாரா விஜயனின் தந்தை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, துஷாரா விஜயன் தந்தைக்கும் திமுகவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பாம். இவருடைய தந்தை திண்டுக்கல் திமுகவில் மிகவும் முக்கிய புள்ளியாக வலம் வருகிறார். சாணார்பட்டி விஜயன் என்றால் திண்டுக்கல் திமுகவில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு சாணார்பட்டி விஜயன் தோற்று இருந்தாலும் தற்போது சாணார்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சி குழு அதாவது மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இவர் இருக்கிறார். அமைச்சர் ஐ பெரியசாமியின் நெருக்கத்திற்குரிய நபர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். இவர் கடந்த 40 வருடமாக திமுக கட்சியில் பணியாற்றி வருகிறார்.

Advertisement