என்னை 14 மாதங்கள் சித்ரவதை செய்தார் – விஜயகாந்த் பட நடிகை பரபரப்பு புகார்.

0
589
- Advertisement -

தெலுங்கில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “பிரேமா கோசம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புளோரா இவருக்கும் ஆஷா சைனி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான “கஜேந்திரா ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழில் “குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட மொழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் மாடல் அழகியாகவும் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இனைய நிகழ்ச்சிகளிலும் நடித்திருந்தார். இப்படி பட்ட நிலையில் தான் நடிகை புளோரா சைனி தன்னுடைய வாழ்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

திருப்புமுனை :

இந்திய சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டா பதிவில் “நான் என்னுடைய 20 வயதில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வந்தேன். அப்போது ஹிந்தியில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தேன். இப்படி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு தயாரிப்பாளரின் மீது காதல் கொண்டேன் ஆனால் அதற்கு பிறகுதான் என்னுடைய வாழ்கை மாறியது.

14 மாதங்கள் சித்ரவதை :

அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்திக்கொண்டார். என்னுடைய முகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் என்னை காயப்படுத்தி என்னுடைய போனையும் பிடிங்கி வைத்துக் கொண்டார். மேலும் என்னை 14 மாதங்கள் நடிக்க விடாமலும், யாரிடமும் பேச விடாமலும் சித்ரவதை செய்தார்.கடைசியில் எப்படியோ அங்கிருந்து தப்பித்து என்னுடைய பெற்றோர்களிடம் திரும்பி வந்துவிட்டேன். அந்த நரகத்தில் இருந்து மீள எனக்கு சில காலங்கள் ஆனது.

-விளம்பரம்-

தடையை உடைத்த தயாரிப்பாளர் :

ஆனால் இப்போது என்னுடைய பெற்றோருடன் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று அந்த வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார் நடிகை புளோரா சைனி. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு முன்னர் கூட 2007-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று நான் காதலித்த பிரபல தயரிப்பாளர் கவுரங் தோஷியுடன் டேட்டிங் சென்ற போது என்னை கடுமையாக தாக்கி தாடை எலும்பை உடைத்ததாகவும் இவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement