‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல சீரியல் நடிகையின் சகோதரி.

0
1041
gowri
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
I am not ambitious: Gauri Pradhan - The Statesman
கௌரி

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இது வெள்ளித் திரைக்கு மற்றும் இன்றி சின்னத் திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை கௌரி பிரதான் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “எனது சகோதரி கீதாஞ்சலியை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். அவளும், அவளது நண்பர்களும் மருத்துவமனையில் ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு, அவர்களது புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார். அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. நடிகை கௌரி பிரதான் “து ஆஷிகு, ரிஸ்தான் கா மேலா, மேரி ஆஷிகு தும்சே ஹை, லெஃப்ட் ரைட் லெஃப்ட், கைசா ஏ பியார் ஹை, கஷம் சே, ஸ்பெஷல் ஸ்குவாட், குடும்ப்’ போன்ற பல ஹிந்தி டிவி சீரியல்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement