ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற திருமணம். கௌதமின் முன்னாள் கணவர் மற்றும் மகள் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
682
gauthami
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. தமிழில் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இப்போது பி.ஜே.பி-யில் பிஸியாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன். வானதி சீனிவாசனுக்கு முன்னரே பி.ஜே.பி கட்சியின் அகில இந்திய இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தவர் கெளதமி. தமிழில் பல்வேறு படங்களில் நடித்த கௌதமிக்கும் கமலுக்கும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் போது தான் நட்பு ஆரம்பித்தது. அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபருடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. ஆனால் 1999ஆம் ஆண்டு இருவரும் தகருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

- Advertisement -

கமலுடன் பிரேக் அப் :

இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர். இதற்கு காரணம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கவுதமி கூறினார்.

தற்போது கவுதமி அவரது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கிறார். கமல் தனது வாழ்க்கையை கையில் எடுத்து அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இதற்கிடையில் கௌதமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த கௌதமி புற்று நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வ்களையும் பெண்கள் மத்தியில் செய்து வருகிறார்.

-விளம்பரம்-

புற்று நோய் விழிப்புணர்வு :

சமீபத்தில் சென்ற புத்தாண்டு தினத்தன்று நடிகை கௌதமி, துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடி அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் தனது மகளுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை கெளதமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கெளதமி முன்னாள் கணவர் :

கெளதமியின் முதல் திருமணம் ஜெயலலிதா தலைமையில் தான் நடைபெற்றது. அதே போல கணவரை பிரிந்த பின்னர் அவரது மகள் கெளதமியிடம் தான் வளர்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கெளதமியின் முன்னாள் கணவரின் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. அதே போல சமீபத்தில் கெளதமி மகள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூட செய்திகள் வெளியாகி இருந்தது.

Advertisement