பிரபல மேடை கலைஞருடன் டேட்டிங் சென்றாரா விக்ரம் பட நடிகை காயத்திரி – வைரலாகும் காதல் கிசுகிசு.

0
1711
- Advertisement -

பிரபல மேடை கலைஞரை விஜய் சேதுபதி பட நடிகை காயத்ரி காதலிக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் காயத்ரி. இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த 18 வயசு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் காயத்ரி வேற லெவல் பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் அதிகம் விஜய் சேதுபதி உடன் தான் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமனிதன்.

- Advertisement -

காயத்ரி திரைப்பயணம்:

இந்த படத்தில் காயத்ரி அவர்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குடும்ப தலைவியாக நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் பகத் பாசனின் காதலியாக நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டிருந்தது.

விக்ரம் படம்:

மேலும், விக்ரம் படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து காயத்ரி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை காயத்ரி அவர்கள் பிரபல ஸ்டேண்ட் ஆப் காமெடியனை காதலிக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டாண்ட் அப் காமெடியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் அரவிந்த்.

-விளம்பரம்-

காயத்ரி காதலிக்கும் நபர்:

இவர் பல மேடை நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் சென்னை மட்டுமில்லாமல் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று இவருடைய நிகழ்ச்சிகளை நடத்திருக்கிறார். தற்போது காயத்ரியை அரவிந்த் காதலிக்கும் தகவல் தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் காயத்ரி அவர்கள் தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார் அதில் அவர், ரயில்வே ரிசர்வேஷன் பேச்சு நீங்கள் ஆரம்பித்ததில் இருந்து உங்களது ‘we need to talk’ வரை எனது வாழ்க்கையில் நீங்கள் நெடுதூரம் வந்துள்ளீர்கள்.

காயத்திரி பதிவு:

என்னைத் தட்டிக் கொடுத்து அனைத்து விதமான ஆதரவையும் அன்பையும் எனக்குக் கொடுத்துள்ளீர்கள். உங்களை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது’ என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர்களுடைய காதலை குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து காயத்ரி பேசவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய காதலை வெளிப்படையாக இருவரும் உறுதி செய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement