அப்படியே குட்டி ஜெனிலியா போல இருக்கும் அவரின் மகன் – இவருக்கு இவ்ளோ பேசிய மகனா ? சத்தியமா நம்ப முடியாலேயே.

0
489
jenilia
- Advertisement -

நடிகை ஜெனிலியாவின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஜெனிலியா. தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். படத்தில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. இவர் தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஜெனிலியா திரைப்பயணம்:

பின் தென் இந்திய சினிமா உலகில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இவர் ஹிந்தியில் அதிக கவனம்செலுத்தி இருந்தார். பின் பட வாய்ப்பு குறைவு காரணமாக இவர் ஹிந்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் காதலில் இருந்தார்.

ஜெனிலியா குடும்பம்:

பின்னர் இவர்கள் இருவரும் 2012 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் ஜெனிலியா. இது ஒரு பக்கம் இருக்க, ஜெனிலியா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் ஜெனிலியா:

இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ, வீடியோக்கள் என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இவர் தன் கணவருடன் சேர்ந்து செய்யும் ரீல்ஸ் வீடியோ எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஜெனிலியா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதில் ஜெனிலியா தன் மகனின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும். தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே ஜெனிலியாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்று ஆச்சரியத்தில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement