ஹன்சிகா காதலன் இவரா..? முத்த காட்சியுடன் வெளிவந்த புகைப்படம்..!

0
483
hansika-motwani

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வரும் நடிகை ஹன்ஷிகா சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து வந்தார் ஆனால், சில மாதங்களிலேயே இவர்கள் இருவது காதலும் முறிந்தது.

HANSIKA

சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஹன்சிகா பின்னர் நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தான் தெரியாமல் இருந்து வந்தது.

சமீப காலமாக கிசுகிசுக்கள் அனைத்திலும் இருந்து கொஞ்சம் தப்பியுள்ள நடிகை ஹன்சிகா இடையில் கொஞ்சம் பட வாய்ப்புகள் இல்லாமலும் இருந்து வந்தார். தற்போது அம்மணிக்கு கையில் ஒரே ஒரு படம் மட்டுமே கையில் உள்ளது. இருப்பினும் பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஹான்சிகா ஒரு ஆணின் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஹன்சிகா. அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் தான் உங்கள் காதலனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ஹன்ஷிகா தரப்பில் இருந்து இதுபற்றி எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் ஹன்சிகாவின் ரசிகர்கள் சிலர் புகைப்படத்தில் ஹன்சிகா முத்தமிடும் நபர் தான் அவருடைய காதலர் என்று வருத்தத்தில் புலம்பி வருகின்றனர்