குளியல் தொட்டியில் நுரை சூழ்ந்த உடை, கையில் கிளாஸ் – ஹன்சிகாவின் DND வீடியோ.

0
1721
hansika
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், போகன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஹன்சிகா அவர்கள் தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஹன்சிகா பின்னர் நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தான் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது இவர் நடித்து வரும் மஹா படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீப காலமாக கிசுகிசுக்கள் அனைத்திலும் இருந்து கொஞ்சம் தப்பியுள்ள நடிகை ஹன்சிகா இடையில் கொஞ்சம் பட வாய்ப்புகள் இல்லாமலும் இருந்து வந்தார். தற்போது அம்மணிக்கு கையில் ஒரே ஒரு படம் மட்டுமே கையில் உள்ளது. இருப்பினும் பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார் அம்மணி.

அதுமட்டுமல்லாம் கடந்த ஆண்டு ஹன்சிகா பிகினி உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், அந்த புகைப்படங்களை தான் வெளியிடவில்லை என்றும், தனது போனை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் கூறி இருந்தார் ஹன்சிகா.இப்படி ஒரு நிலையில் இவர், பாத் டப்பில் நுரையால் ததும்பும் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு யாரும் கால் பண்ண வேண்டாம் என்று DND மோடில் இருக்கிறார் ஹன்சிகா.

-விளம்பரம்-
Advertisement