ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கமுடியாது ! கோபத்தில் மூன்றெழுத்து நடிகை ?

0
2762
Actress

ஹீரோக்கள் வேண்டுமானால் அவர்களின் 20 வயது முதல் 60 வயதை தாண்டினாலும் கூட ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் ஹீரோயின்களுக்கு அப்படி இல்லை முப்பதை கடந்துவிட்டால் போதும் அக்கா கேரக்டரில், அம்மா கேரக்டரும் அவர்களை தேடி வர ஆரம்பித்து விடும். அவர்களும் நம் கதை அவ்வளவு தான் என அந்த கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த நிலை தான் தற்போது ஒரு ஹீரோயினுக்கு ஏற்பட்டுள்ளது. கேரளத்து வரவான இந்த மூன்றெழுத்து நடிகை. தமிழில் ஹீரோயினாக வலம் வந்தவர். வயது 30யை தாண்ட, அவருக்கும் அந்த பழைய கேரக்டர்கள் வர ஆரம்பித்தன.

மார்க்கெட் டல் ஆனதால் அவரும் நடித்தார். ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் வில்லனுக்கு மனைவியான நடித்திருந்தார். அந்த படம் எப்படியும் தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நினைத்திருந்தார் அந்த மூன்றெழுத்து கேரளத்து வரவு.ஆனால், அவர் எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லை. யாரும் அவரது நடிப்பையும் பாராட்டவில்லை. இதனால கடுப்பாகி இருந்த அவரிடம் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க அழைத்திருக்கிறார் ஒரு பிரபல இயக்குனர்.

இதனால், டென்ஷன் ஆன நடிகை வில்லனுக்கு மனையவியாக நடித்தால் உடனே என்னை அதற்கென்றே செட் செய்து ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க கூப்பிடுவீர்களா? என கடித்துக்கொண்டுள்ளார். அதற்கெல்லாம் வேறு ஆளை பாருங்க என சொல்லி அனுப்பிவிட்டார் நடிகை. யார் அந்த மூன்றெழுத்து கேரளத்து வரவு?? கமென்டில் பதிவிடவும்