இந்திரஜா-கார்த்திக் தம்பதிக்கு தடபுடலாக விருந்து வைத்த சிவாஜி தேவ் குடும்பம்- வைரலாகும் புகைப்படம்

0
407
- Advertisement -

இந்திரஜா- கார்த்திக் தம்பதிக்கு சிவாஜி தேவ் குடும்பத்தினர் தடபுடலாக விருந்து வைத்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் தான் இந்திரஜா.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்திரஜா-கார்த்திக் திருமணம்:

அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதத்துக்கு முன் இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மதுரையில் ‘தொடர்வோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

திருமணம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். மேலும், இந்திரஜா- கார்த்திக் திருமணம் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் வீட்டு திருமணம் என்றாலே தடபுடலாக நடப்பது வழக்கம் தான். ஆனால், ரோபோ ஷங்கர் வீட்டு திருமணம் ஒரு வாரத்திற்கு முன்பே கலைகட்டி இருந்தது. வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி என்று படு கோலாகலாக தனது மகள் திருமணத்தை நடத்தி இருந்தார் ரோபோ ஷங்கர்.

விருந்து வைத்து சிவாஜி தேவ்:

இப்படி இருக்கும் நிலையில் இந்திரஜா-கார்த்திக் தம்பதிக்கு சிவாஜி தேவ் குடும்பத்தினர் அழைத்து விருந்து கொடுத்திருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன். இவருடைய மகன் ராம்குமாரின் மகன் தான் சிவாஜி தேவ். இவர் சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே இவர் பிரபல நடிகை சுஜா வருணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் இந்திரஜா- கார்த்தி தம்பதியை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து தடபுடலாக விருந்து வைத்திருக்கிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement