ஒல்லியாக மாறியதை காட்ட ஜிம் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த இனியா.!

By Rajkumar · 8/7/2019

பொதுவாக இந்தி சினிமாவில் தான் நடிகைகள் தங்களது உடல்களை ஒல்லியாக வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருவார்கள். ஆனால், சமீப காலமாக ஒல்லியாக உடல் அமைப்பை வைத்து வரும் கலாச்சாரம் தமிழ் நடிகைகளையும் தொற்றிக்கொண்டு உள்ளது.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் பூசலான உடல் எடையுடன் வந்த சில நடிகைகள் கூட தற்போது ஒல்லியாக மாற உடற் பயிற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான இனியாவும் இதே லிஸ்டில் சேர்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார் இனியா.

இதையும் பாருங்க : சாண்டி டபுள் கேம்.! கடுப்பா கிய கஸ்தூரி.! என்ன இப்படி சொல்லிட்டார்.! 

அந்த படத்திற்கு பின்னர் இவர் “மௌனகுரு” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் தாராளமாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணமே இவர் நடுவில் உடல் எடை கூடி சற்று பருமனாக மாறியது தான். ஆனால், தற்போது தனது உடல் எடை குறைத்து ஒல்லியான உடல் அமைப்பிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் அட்டை படத்திற்கு இவர் கொடுத்த போஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

behindtalkies AMP · Quick view
View full