சாண்டி டபுள் கேம்.! கடுப்பா கிய கஸ்தூரி.! என்ன இப்படி சொல்லிட்டார்.!

0
3574
Kasthuri
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சரி, பார்வையாளர்களுக்கும் சரி அனைவருக்கும் மிகவும் பிடித்த நபராக இருந்து வருகிறார் சாண்டி. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாத்திமா கூட சாண்டி தான் அந்த வீட்டின் என்டர்டைனர் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், சாண்டியை இரட்டை கேம் ஆடுபவர் என்று குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் சாண்டி, சேரனின் பெயரை தான் குறிப்பிட்டிருந்தார். மேலும், சரவணன் மற்றும் கவினிடமும் கூட சேரனை நாமினேட் செய்யுமாறு கூறியிருந்தார் சாண்டி. ஆனால், கவின், சேரனை நாமினேட் செய்யவில்லை.

இதையும் பாருங்க : மனம் கொத்தி பறவை பட நடிகையா இது.! இப்போ இப்படி இருக்காங்க பாருங்க.! 

- Advertisement -

சாண்டி இப்படி செய்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை கஸ்தூரி ‘தனியாக நாமினேஷன் செய்த போது சேரனின் பெயரை கூறினார் சாண்டி ஆனால், கமல் சார் ரசிகர்கள் முன் கேட்டபோது சேரன் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். சாண்டியிடம் இருந்து இப்படி ஒரு டபுள் கேமை எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆனால், கஸ்தூரியின் இந்த டீவீட்டுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தான் வருகின்றனர். சாண்டிக்கு கண்பெசஷன் ரூமில் பேசியது மக்களுக்கு தெரியும் என்று சாண்டிக்கும் தெரியும். அதே போல இந்த ஒரு வாரத்தில் சேரன் பற்றிய அபிப்ராயத்தை மாற்றியிருக்கலாம் என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement