படத்துல இப்படி ஒரு 'Morph' சீன் இருக்குன்னு என் குடும்பத்துல சொன்னதும் இதான் சொன்னாங்க - லவ் டுடே இவனா பேட்டி.

By Manikandan · 3/12/2022

சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் கதாநாயகியான நடிகை இவானா இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பற்றி பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு தான் இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே

இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல ரவி, நடித்திருக்கிறார்கள். ரவி, என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார்.

லவ் டுடே படத்தின் கதை :

ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். இதை இவானாவின் இதை சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

View this post on Instagram

A post shared by Ivana (@i__ivana_)

செல்போனால் வரும் பிரச்சனை :

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் படத்திற்கு இருவருக்கும் படத்திற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் க்ளைமாக்ஸ் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது.

View this post on Instagram

A post shared by Ivana (@i__ivana_)

க்ளைமாக்ஸ் பற்றி இவானா கூறியது :

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியான இவானா பிரபல செய்து ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் கூறுகையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஆபாசமான "மார்ப்" வீடியோவில் பார்க்க வேண்டிய கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க தான் எப்படி ஒப்புக்கொண்டேன் என்று கூறியிருந்தார். படத்தின் இந்த காட்சியை படத்தை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள் என்று எனக்கு பதற்றம் இல்லை. நாம் முதலில் இந்த காட்சியை பற்றி என்னுடைய குடும்பத்தினருடன் கலந்துரையாடினேன்.

View this post on Instagram

A post shared by Ivana (@i__ivana_)

இப்படத்தின் கதைக்கு இப்படடிப்பட்ட க்ளைமாக்ஸ் தேவை என்பதினால் இதற்க்கு நான் ஒப்புக்கொண்டேன். சிலர் என்னிடம் இந்த காட்சி தவறான வழியில் செல்வதாக கூறினர். ஆனால் அந்த சந்தேகம் எனக்கு ஏற்படவில்லை. இப்படத்தின் முழு திரைக்கதைக்கு இந்த மாதிரியான க்ளைமாக்ஸ் தேவை படுவதினால்தான் இதற்கு நான் ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும் :

இந்த படத்தில் நடப்பதை போலவே நம்முடைய வாழ்விலும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படடிப்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளன பெண்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். தவறு செய்த்தவன்தான் முகத்தை மறைக்க வேண்டும். தவறு செய்யாதவர் முகத்தை மறைக்கவே கூடாது. நாம் குற்றம் செய்யவில்லை என்று குரல் கொடுத்தால்தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியும் இல்லையென்றால், நாம் கடைசி வரை மனா உளைச்சலிலேதான் இருக்க முடியும். முதலில் உங்களை நீங்கள் நேசியுங்கள் என்று லவ் டுடே படத்தில் நடந்த பல விஷியங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை இவானா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full