லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு மனைவி துர்கா கேட்ட விஷயம், ஷாக்கான முதல்வர் ஸ்டாலின் – மகன் உதயநிதி சொன்ன கலகல தகவல்

0
496
lovetoday
- Advertisement -

லவ் டுடே திரைப்படத்தை பார்த்து விட்டு தமிழ் நாட்டின் தற்போதைய முதல்வராக உள்ள மு.கா ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியடைந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பாக அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் கொடுத்துள்ள பேட்டியில் இந்த விஷியத்தை பற்றி பேசியிருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது வரவேற்பை இயக்கிய முதல் குறும்படத்தை யூடுயூபில் பலர் தேடி சென்று பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே

-விளம்பரம்-
lovetoday

இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல ரவி, நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார்.

- Advertisement -

லவ் டுடே படத்தின் கதை :

ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். இதை இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் படத்திற்கு இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

பெற்றிப்படம் :

லவ் டுடே திரைப்படமானது கடந்த 4ஆம் தேதி வெளியானதை தொடந்து 2 வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படத்துடன் இணைந்து வெளியான இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்த “காஃபி வித் காதல்” திரைப்படமானது ஏதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை இருந்தாலும் சுமாராக ஓடுகிறது. இப்படியுருக்கு இந்த இரண்டு திரைப்படங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் மகனான உதயநிதி “ரெட் ஜெயண்ட் மூவிஸ்” நிறுவனம் தயாரித்திருந்தது.

லவ் டுடே படத்தை பற்றி உதயநிதி கூறியது :

இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றிக்கு பேட்டியளித்திருந்த உதயநிதி லவ் டுடே படம் எனது அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. எனது அம்மாவும் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னாரக்ள், அதோடு இந்த படத்தில் பார்த்து போல நாமும் செல் போன்களை மாற்றிக்கொள்ளலாமா என்று எனது அம்மா `அப்பாவிடம் கேட்டார் அதற்கு நானும் அப்பாவும் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டோம் என்று சிரித்தபடி கூறியிருந்தார்.

Advertisement