மொட்டையடித்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை – காரணத்தை கேட்டால் ஷாக்காவீங்க.

0
2204
Jaya-Bhattacharya
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
I am still alive: Jaya Bhattacharya on 'death report'

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இது வெள்ளித்திரைக்கு மற்றும் இன்றி சின்னத்திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியில் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஜெயா பட்டாச்சார்யா.

- Advertisement -

இவர் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹு தி, கஷம் சே, ஜான்சி கி ராணி, கங்கா’ போன்ற பல டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். பல சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரில் தான் வலம் வருவாராம் நடிகை ஜெயா பட்டாச்சார்யா. கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘நெட்ஃபிளிக்ஸ்’- யில் வெளி வந்த வெப் சீரிஸ் ‘டெல்லி க்ரைம்’.

இந்த வெப் சீரிஸை ரிச்சி மேஹ்தா இயக்கியிருந்தார். இதில் கதையின் முக்கிய வேடங்களில் ஷேஃபாலி ஷா, ரசிகா துகால், அதில் ஹுசைன், ராஜேஷ் தய்லங் ஆகியோர் நடித்திருந்தனர். இவ்வெப் சீரிஸில் நடிகை ஜெயா பட்டாச்சார்யா ‘விம்லா பரத்வாஜ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. நடிகை ஜெயா பட்டாச்சார்யா சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ் மட்டுமின்றி ‘தேவ்தாஸ், லஜ்ஜா, ஹோ சக்தா ஹாய், ஜிக்யாசா, ஏக் விவாஹ் ஐஷா பி, சிர்ஃப் தம், ஃபிஸா’ போன்ற சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது, நடிகை ஜெயா பட்டாச்சார்யா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். இந்த லாக் டவுன் டைமில் தனது முடியை பராமரிக்க முடியவில்லை என்று கூறி அவ்வீடியோ பதிவில் மொட்டை அடித்துக் கொள்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement