அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் சேர இருக்கும் வாரிசு பட முக்கிய பிரபலம் ? இதோ விவரம்

0
1250
- Advertisement -

பாஜக கட்சியில் வாரிசு பட நடிகை ஜெயசுதா இணைய இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஜெயசுதா. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடித்திருக்கும் போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர இடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, சமீப காலமாக இவர் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக, இவர் நடிப்பில் தமிழில் வெளியாகியிருந்த படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகியிருந்தது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை கொண்ட படம். மேலும், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை வாரி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் பாஜகவில் இணைய இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயசுதா அவர்கள் சினிமாவை போல அரசியலிலுமே அதிக ஆர்வம் கொண்டவர்.

ஜெயசுதா படங்கள்:

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலில் காங்கிரஸில் இணைந்திருந்தார். அப்போது செகன்ட் ரபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இதனை அடுத்து இவர் ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக பதவி வகித்தார். பின் கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார். அந்த கட்சியில் இவர் மூன்று ஆண்டுகள் தான் பணியாற்றினார். அதன் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு இணைந்தார்.

-விளம்பரம்-

ஜெயசுதா அரசியல்:

இப்போது மீண்டும் அந்த கட்சியில் இருந்து விலகி விலகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் கூடிய விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் ஆந்திர மாநில பாஜக தலைவர் ஜி கிஷன் ரெட்டியை சந்தித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாஜகவில் இணைந்தால் செகண்ட்ராபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஜெயசுதா வைத்திருக்கிறார்.

பாஜகவில் இணையும் ஜெயசுதா:

இதற்கு பாஜகவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஜெயசுதா டெல்லி செல்ல இருக்கிறார். அங்கு அமித்ஷா மற்றும் முக்கிய பாஜக தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைய இருக்கிறாரார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்காகி வருகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜெயசுதா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement