தன்னுடைய காதல் நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஜெயசுதா. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு படங்களில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடித்திருக்கும் போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, சமீப காலமாக இவர் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக, விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகியிருந்த படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகியிருந்தது.

Advertisement

ஜெயசுதா குறித்த தகவல்:

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை கொண்ட படம். மேலும், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை வாரி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஜெயசுதா அவர்கள் சினிமாவை போல அரசியலிலுமே அதிக ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலில் காங்கிரஸில் இணைந்திருந்தார். அப்போது செகன்ட் ரபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இதனை அடுத்து இவர் சில ஆண்டுகள் எம்எல்ஏவாக பதவி வகித்தார்.

ஜெயசுதா அரசியல்:

பின் கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார். அந்த கட்சியில் இவர் மூன்று ஆண்டுகள் தான் பணியாற்றினார். அதன் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு இணைந்தார். இப்போது இவர் மீண்டும் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடைய நடிகை ஜெயசுதா அவர்கள் இரண்டு திருமணம் செய்து கொண்டார். அதிலும் அவருடைய இரண்டாவது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

Advertisement

ஜெயசுதா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயசுதா, நான் ஹீரோயினியாக நடித்த ஆரம்ப காலத்தில் தெலுங்கு நடிகர்கள் மீது சிறிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அது காதலா? ஈர்ப்பா? என்று எனக்கு தெரியவில்லை. அதோட அது நீண்ட காலமும் நீடிக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது தான் கிரஷ் இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது எனக்கு ரொம்பவே ஆர்வம் இருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

Advertisement

காதல் குறித்து சொன்னது:

பல நாட்கள் நான் கனவு கண்டேன். ஆனால், அவர் மீது இருந்த ஈர்ப்பு திருமணம் வரை செல்லாது என்று புரிந்து கொண்டேன். அதே போல் நான் ஒரு பாடகரை காதலித்தேன். இம்ரான் கான் போல அவரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவு கண்டேன். சில வருடங்களில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு இனி எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement