கதையை கேட்டுவிட்டு ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! புகைப்படம் உள்ளே!

0
1344
Karthik-subburaj

தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக இருந்து வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதக என்று பல கதாநாயகிகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தட்டிக் கழித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

kajal-agarwal

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான நடிகை காஜல் அகர்வால், ஒரு சில இந்தி படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழில் முன்னணி ஹீரோகளான விஜய் , அஜித் , சூர்யா ஆகிய மூன்று ஹீரோகளுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘காலா’ படத்திற்கு பின்னர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கருதியுள்ளார்.

இதையடுத்து நடிகை கஜாலிடம் இந்த படத்தின் கதையை கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்டு முடித்த நடிகை காஜல் அகர்வால் யோசித்து பின்னர் சொல்வதாக கூறியுள்ளார். இதனால் ரஜினி படத்தில் நடிக்க மறுத்த நடிகை காஜல் அகர்வால் மீது சற்று கோவத்தில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். ஆனால், இந்த விடயம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.