சினிமாவில் வந்த பிறகு ஒருவரை காதலித்தேன்.!ஆனால், அதுவும் தோல்வி.! நடிகை காஜல்.!

0
514
kajal

சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகைகள் காதலித்து தோல்வியடைந்தவர்களாக தான் இருக்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் காஜல் அகர்வாலும் காதல் தோல்வி அடைந்தவர் தானாம்.

Image result for kajal aggarwal

தென்னிந்திய நடிகையா தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தமிழில் பழனி படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதற்காக மர்ம கலைகளை கற்று வருகிறார். ஆனால், இந்தியன் 2 திரைப்படம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

Image result for kajal aggarwal love

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் அகர்வால் தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் சினிமாவிற்கு வரும் முன்பே இவருக்கு ஒரு காதல் தோல்வி இருந்ததாம். அதன்பிறகு சினிமாவில் முன்னணிக்கு வந்த பிறகு காஜல் ஒருவரை காதலித்தாராம். “அவரும் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை.

அந்த காதலும் தோல்வியில் முடிய நான் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போனது தான் காரணம். ஒரு relationshipக்கு முக்கியம் நேரில் சந்தித்து, நேரம் செலவிடுவது தான். ஆனால் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் காதல் தோல்வியின் முடிந்தது” என காஜல் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசகிசுக்குபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.