இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் தோழிலுடன் நீச்சல் உடையில் ஜெயம் ரவி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.

0
2122
kamna
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள்தான் விரைவில் காணாமல் போய் விடுகிறார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும்போது மிகப் பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது. அப்படி சினிமாவில் விட்டு பல்வேறு நடிகை நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்தவகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதை திருடிய நடிகை காம்னா என்ன ஆனார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். மேலும் ,கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடல் துறையில் ஈடுபாடு இருந்ததால் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பட்டத்தையும் பிடித்தார்.

இதையும் பாருங்க : 69வது பிறந்தநாளை கொண்டாடும் விஜயராஜ் – முதல் படத்திற்காக அவர் நடித்திய போட்டோ ஷூட். அரிய புகைப்படம்.

- Advertisement -

மேலும், 2004 ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படத்தின்ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு 2005 ஆம் ஆண்டு பிரேமிக்குலு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர் இயக்குனர் சரன் பார்வையில் விழுந்ததால் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.சரண் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் காம்னா.

ஆனால், அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார்.இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை காம்னா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்த முறை வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். அந்த வகையில் இவர் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது.

Advertisement