வரலாறு படத்தில் அஜித் கூட நடித்த நடிகையா இவங்க ! இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே

0
8583

நடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு சார்பில் இவருக்கு மெரிட் வழங்கப்பட்டு ராஜஸ்தானில் பிட்ஸ் பிலானி கல்லூரியில் பொறியியல் படித்தார்.
அதிலும் இவர் படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகும்.

kanika-actress

சிறு வயதில் இருந்து நன்றாக பாடும் திறமை இவரிடம் இருந்தது. இதனால் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்திருந்தனர். அதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மாடல் வரவில்லை என ஒதுங்கிவிட்டார். இதனால் வேறு வழி இன்றி பாடுவதற்காக வந்திருந்த கனிகாவை அந்த போட்டியில் கலந்துகொள்ள வைத்தனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த அழகிப் போட்டியில் பட்டமும் வென்றுவிட்டார் கனிகா. இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா.

Actress-kanika

அதன்பின்னர் ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் பட வாய்ப்புகள் இவருக்கு வந்தது ஆனால் இனி படிப்பை முடித்துவிட்டு தான் நடிப்பேன் எனக் கூறி அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார் கனிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் கனிகா.

தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தான்.

kanika

திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிடுவார் என பலர் நினைத்தனர் ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கனிகா. தற்போது க்ரீன் ஆப்பிள், இ-டைரி போன்ற மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிரர் கனிகா.