ஜூலியை மரண கலாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி..! எதற்கு தெரியுமா..? – விவரம் உள்ளே

0
1366
actressjulie

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்கள் மனதில் வீர மங்கையாக நல்ல பெயரை எடுத்த ஜூலி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்றதும் அவரது சுயரூபம் கண்டு மக்கள் அவரை நாறு நாராக கிழித்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது பிரபல நடிகை கஸ்தூரியும் அவரை கலாய்க்கும் அணியில் சேர்ந்துள்ளார்.
Julie bigg boss

சில நாட்களுக்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஜூலி ஆகிய இருவருமே அரசியலுக்கு வரப்போவதாக ஒரு சில செய்திகள் வந்தது. இதில் ஜூலி தான் அரசியலுக்கு வரப்போவதாக இரண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டார். இதனை பார்த்த அனைவரும் “தமிழ் நாட்டில் இருக்கிற பிரச்சனையில் நீ வேற ஏன் இப்படி படுத்தற ஜூலி” என்று கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி தான் நடிக்க போகும் படத்திற்காக தான் இந்த அரசிய விளம்பரத்தை செய்தேன் என்று அவர் தப்பித்து விட்டார். ஆனால் ஜூலியை மட்டும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஜூலியை கலாய்க்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் “தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு..” என்று ஜூலியை கலைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் என் தலைவியை யார் கலாய்ப்பது என்று கஸ்தூரியுடன் சேர்ந்து கலாய்த்து வருகின்றனர்

Advertisement