திடீர் திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்தி – மாப்பிள்ளை யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே.

0
1997
- Advertisement -

இந்த லாக்டவுன் சமயத்தில் பல்வேறு நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான கயல் ஆனந்தி திடீர் திருமணம் முடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றுபெயர் வந்தது.

-விளம்பரம்-
kayal-anandhi-got-married

இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் நடிகை ஆனந்தி நடிப்பில் வெளிவந்த படம் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கினார். அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

 தமிழில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, ‘இராவணக் கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனந்தி. இறுதியாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ படத்தில் நடித்திருந்தார்.  தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, ‘இராவணக் கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கயல் ஆனந்தி திடீர் திருமணம் செய்துள்ளார்.  நேற்று (ஜனவரி 7 ) இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது.

Kayal Anandhi gets married We have the dope on the groom

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் என்ற பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. கொரோனா பிரச்சனை காரணமாக நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். கயல் ஆனந்தியின் திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement