உண்மையில் இது கீர்த்தி சுரேஷ் தானா ? என்ன இவ்ளோ கருப்பா இருகாங்க. வைரலாகும் பழைய புகைப்படம்.

0
2578
keerthi-suresh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அதில் தற்போது இருக்கும் கீர்த்தி சுரேஷை விட மிகவும் கருப்பாக இருக்கும் கீர்த்தி சுரேஷை பார்த்து பலரும் இது கீர்த்தி சுரேஷா என்று வியந்து போயுள்ளார்கள். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

`முள்ளும் மலரும்’ படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் – தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் துவங்கியது. ஆனால், படப்பிடிப்பில் 4 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-
Advertisement