தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தன்னுடைய சம்பளத்தில் 20 முதல் 30 சதவீதம் குறைத்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தத் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. புதிய படங்கள் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பொருள் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த இக்கட்டான காலகட்டத்தில் பெரிய நடிகர்கள் தங்களுடைய சம்பத்தை குறைத்து குறைத்துக் கொண்டு உள்ளனர். பின் தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து நடிகர் நாசர் (15%), விஜய் ஆண்டனி(25%), இயக்குநர் ஹரி(25%), ஹரிஷ் கல்யாண், நடிகர் உதயா(40%) உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

மேலும், நடிகைகளில் யாரும் இதுவரை சம்பள குறைப்பு பற்றி முடிவெடுக்காத நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை குறைத்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது தந்தை தயாரிப்பாளர் என்பதால் அவரது பொருளாதார இழப்பை புரிந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் 20 முதல் 30 சதவிகித சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் 19-ம் தேதி பெண்குயின் என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement