பிரபல தளபதி பட நடிகையின் பாட்டி ஹீரோயினா..? எந்த படம்..யார் தெரியுமா

0
1205
keerthi

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் முன்னனி நடிகர்களுடன் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “நடிகையர் திலகம்” படம் திரை அரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது இவரது பாட்டியும் சினிமாவில் நடித்துள்ளாராம்.

உலகநாயகன் கமலஹாசனின் சகோதரர் சாருஹாசன் பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராக நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கிவரும் “தாதா” 87 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஜனகராஜும் , பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் நடித்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த படத்தின் படிப்பிடிப்புகள் துவங்கபட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் சாருஹாசன் ஒரு வித்யாசமான டான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

keerthi

இந்த படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் பாட்டி நடிகர் சாருஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். மேலும் இவரது மகளான கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் ஒரு திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.