அண்ணாத்த படத்தில் தன்னுடைய ரோல் குறித்து தற்போது வருத்தப்பட்ட குஷ்பூ – வைரலாகும் அவரின் பதிவு, ஏன் பாருங்க ?

0
22575
kushboo
- Advertisement -

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவரது படங்கள் என்றாலே இன்றளவும் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து தான் வருகிறது. இறுதியாக இவர் முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என்று பலர் நடித்திருக்கிறார்கள் இதில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கிறார் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் டிரைலர் மூலம் இந்த படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது. அதேபோல இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில் மீனா மற்றும் குரு இருவரும் ரஜினியின் முறைப்பெண்களாக நடித்துள்ளார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. மீனா மற்றும் குஷ்பூ இருவருமே ரஜினியுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : 600 பாடல்கள்ல தான் இவர் பேர் இருக்கு, ஆனா இவர் இத்தனை ஆயிரம் பாடலை எழுதி இருக்கார்- சினேகன் மனைவி வேதனை. வீடியோ இதோ.

- Advertisement -

இதில் குஷ்பூ, ரஜினியுடன் அண்ணாமலை, மன்னன், பாண்டியன், தர்மத்தின் தலைவன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியின் படத்தில் நடித்திருக்கிறார் குஷ்பு. இப்படி ஒரு நிலையில் அண்ணாத்த படத்தில் தன்னுடைய தோற்றம் குறித்து தற்போது வருத்தம் அடைந்துள்ள வகையில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

நடிகை குஷ்பு சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் ஸ்லிம்மாக தான் இருந்தார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை கூடிவிட்டார். சமீப காலமாகவே உடல் எடையை குறைத்து வந்த குஷ்பு சமீபத்தில் படு ஸ்லிம்மாக மாறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் அண்ணாத்த படத்தில் நடித்த போதும் தற்போதும் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘நான் ஒல்லியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன், இருந்தாலும் பரவாயில்லை சமாளித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எங்களுக்கு நீங்க குண்டா இருந்தா தான் பிடிக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement