தன்னுடைய App விளம்பரத்திற்காக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கிரண் கொடுத்துள்ள போஸ்.
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'ஜெமினி' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் 'வில்லன்', கமலஹாசனின் 'அன்பே சிவம்' போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான 'வின்னர்' படத்தில் தான்.அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.
ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'ஆம்பள' திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : தேர்தலுக்கு முன்னாடி இந்த படம் வந்திருந்தா திமுக டெபாசிட் கூட வாங்கி இருக்காது - தலைவி பட வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்.
இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'முத்தின கத்திரிக்காய்' படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். கடந்த சில காலமாகவே உடல் எடை கூடி படு பருமனாக மாறிவிட்டார். சமீப காலமாக உடல் எடையை குறைக்க முயற்ச்சி எடுத்து வருகிறார். ஆனால், தனது உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டு வருகிறார் கிரண்.
மேலும், இவர் தனது பெயரில் சொந்தமாக ஆண்ட்ராய்டு app ஒன்றை துவங்கி அதில் தனது கவர்ச்சியான புகைப்பங்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். அதில் பதிவிடும் சில புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுகிறார். அந்த வகையில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். மேலும், அந்த புகைப்படத்தின் கீழ் தன்னுடைய appற்கான லிங்கையும் போட்டுள்ளார்.