தேர்தலுக்கு முன்னாடி இந்த படம் வந்திருந்தா திமுக டெபாசிட் கூட வாங்கி இருக்காது – தலைவி பட வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்.

0
3079
thalaivi
- Advertisement -

மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக எடுத்துள்ளார் இயக்குனர் ஏ.எல் விஜய். தற்போது இந்த படம் தலைவி என்ற பெயரில் வெளிவந்து உள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவம் முதல் தொடங்கி அரசியலில் நுழைந்தது பிறகு அவர் முதல்வராக பதவியேற்று நாட்டை ஆண்டது என அனைத்துமே இயக்குனர் அழகாக எடுத்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் கட்சியின் தலைவர் ஆனார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தமிழக முதல்வராகப் பணியாற்றியுள்ளார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சி தற்போது ட்விட்டரில்படு வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அதில் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக சட்டசபையில் நிகழ்ந்த நிகழ்வை தெளிவாக காட்டி உள்ளது. அது சட்டசபையில் ஜெயலலிதா அவர்களை திமுக கட்சியினர் மிகக் கொடூரமாக தாக்கி அடித்து வெளியே துரத்திய காட்சி காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது அந்த காட்சி மட்டும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளதால் இது குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை தந்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில பேர் இது மட்டும் தேர்தலுக்கு முன்னாடி வந்து இருந்தால் திமுக டெபாசிட் கூட வாங்கி இருக்காது என்று கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தலைவி படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைவிஹார் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் துணிவுடன் வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்று தலைவி படம் காட்டுகிறது. இந்த படம் மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று. அதே நேரத்தில் படத்தில் ஓரிடத்தில் எம்ஜிஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல காட்சி வருகிறது.

எம்ஜிஆர் என்றைக்கும் பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது. அப்படி படத்தில் வரும் காட்சி உண்மையானதல்ல. அதேபோல் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. அதையும் நீக்க வேண்டும்.

நடக்காத சம்பவங்களை படத்தில் வைத்திருக்கக் கூடாது. இது மிகவும் தவறான ஒன்று. இதை பார்ப்பவர்கள் மனதில் வெவ்வேறு எண்ணங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் திமுக எங்களுக்கும், எங்கள் தலைவிக்கும் கொடுத்த பல தொல்லைகளைப் படத்தில் சொல்லவே இல்லை. வரலாற்றுப் படம் என்றாலே அதையும் சொல்லி இருக்க வேண்டும். அதை படத்தில் சொல்லப்படவில்லை இவையெல்லாம் சொல்ல மறந்த கதைகள் என்று கூறியுள்ளார்.

Advertisement