இந்த பாட்டை ஏன் கட் செஞ்சாங்க. நியூ பட பாடலை வெளியிட்ட கிரண்.

0
4784
kiran

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனரும் ஆனவர் எஸ் ஜே சூர்யா. இவருடைய இயக்கத்திலும் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா இயக்கி, நடித்த நியூ படம் 2004 ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சிம்ரன், தேவயானி, கிரண் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

மேலும், இந்த படத்தில் நடிகை கிரண் அவர்கள் சிவகாமி மாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நியூ படத்திலிருந்து வெளிவராத பாடலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் நடிகை கிரண். கிரண் அவர்கள் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடிகை கிரண் அவர்கள் தான் நடித்த நியூ படத்தின் பாடல் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நியூ படத்தில் இந்த பாடல் வெளி வரவில்லை. ஏன் வெளிவரவில்லை என்று கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Kiran Rathod Fan Club - Posts | Facebook

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் பிரபலமடைந்தவர் வில்லன், அன்பே சிவம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்த உடன் இவர் ஹிந்தி பக்கம் சென்று விட்டார்.

-விளம்பரம்-
Advertisement