ஆடைக்கு மேட்ச்சாக தினம் ஒரு மாஸ்க்- மாஸ்க்சில் மாஸ் காட்டும் குஷ்பூ. இதோ புகைப்படங்கள்.

0
1217
kushboo
- Advertisement -

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.அதே போல தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் கருணாஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் எஸ் பி பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கொரோனாயால் வெளியில் வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிலும் வித்யாசயம் காட்டி அசத்தியுள்ளார் பிரபல நடிகையான குஷ்பூ.

பிரபல நடிகையான குஷ்பூ தனது அழகில் மிகுந்த கவனம் கொண்டவர். இவர் பங்குபெற்ற ஜாக்பாட் என்ற நிகழ்ச்சில் இவர் அணியும் புடைவை பார்க்கவே பல பெண் ரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில் கொரோனா காலத்தில் கூட ஆடைக்கு மேட்ச்சாக டிசைன் டிசைனாக மாஸ்க் அணிந்து அசத்தி வருகிறார் குஷிபூ.

-விளம்பரம்-
Advertisement