கண்கலங்கிய குஷ்பு, திமுக தலைமை எடுத்த அதிரடி ஆக்ஷன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது.

0
2104
Kushboo
- Advertisement -

நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடிகை குஷ்பு குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூராக பேசியிருந்தார். இதற்கு நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு அவர்கள் கண்டித்து பதிவு போட்டிருந்தார். பின் அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு அதில் அவர், திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் அத்தனை பேரிடமும் நான் சொல்கிறேன். குஷ்பூவை சீண்டி பார்க்காதீர்கள். ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறது. குஷ்பு பதிலடி கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது. இது போன்ற பேச்சாளர்களை கதவுக்கு பின்னால் பார்த்துவிட்டு ஸ்டாலின் ரசிக்கிறார்.

- Advertisement -

குஷ்பூ அளித்த பேட்டி:

தொடக்கத்தில் இவரை சஸ்பெண்ட் செய்த நிலையில் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.
தேசிய மகளிர் ஆணையம் மூலமாக திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். எந்த ஆணுக்கும் பெண்களைப் பற்றி அவதூறாக பேச உரிமை இல்லை. கைத்தட்டலுக்காக பெண்களை அசிங்கமாக பேசுகிறீர்கள். யார் பெண்களைப் பற்றி அவதூறாக பேசினாலும் அது தங்கள் தாய் தந்தையை அவதூறாக பேசுவதற்கு சமம்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குறித்து பேசியது:

பெண்களை இழிவாக பேசக்கூடிய நிலை எல்லா கட்சியிலும் இருக்கிறது. எல்லா ஆண்களிடமும் நான் கேட்கும் கேள்வி ஒன்று தான். பெண்ணை அவதூறாக பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நான் உட்கார்ந்து அடிப்பேன். அடிக்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. யாரையும் நம்பி நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. என்னை சீண்டி பார்க்க வேண்டாம். ஒரு பெண்ணை இழிவாக பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் வீட்டில் உள்ள அம்மாவை பற்றி இவ்வளவு கேவலமாக பேசுவீர்களா? அவர்கள் பாஷையில் என்னால் பதில் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

ஸ்டாலின் குறித்து சொன்னது:

ஆனால், அப்படி பேசி என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்தி கொள்ள விரும்பவில்லை. கடந்த முறை மன்னிப்பு கேட்டதால் நான் அப்படியே விட்டுவிட்டேன். வேறு இடமாக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன். செருப்பால் அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. கலைஞர் இருக்கும் போது இருந்த திமுக தற்போது இல்லை. ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுகவில் பெண்களை இழிவாக பேச தீனி போட்டு வளர்க்கிறார்கள். நேரடியாகவே நான் முதல்வரை பார்த்து சவால் விடும் தைரியம் எனக்கு இருக்கிறது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது:

மற்ற பெண்களுக்கு அது கிடையாது என்று கூறியிருக்கிறார். இப்படி ஆவேசமாக குஷ்பு அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்ததாக திமுக தலைமை கழகம் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

Advertisement