மொதல்ல இந்த நபரை விசாரியுங்கள். PSBB பள்ளியை தோலுரித்த குட்டி பத்மினி – வைரலாகும் வீடியோ.

0
6160
- Advertisement -

சென்னை கே கே நகரில் உள்ள PSBB பள்ளியின் ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தான் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவாகரத்தில் பள்ளி நிர்வாகத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரபல நடிகையான குட்டி பத்மினி இந்த பள்ளி குறித்து புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பத்மினி தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றில் PSBB பள்ளி குறித்து பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், அந்த பள்ளியில் என் மகளுக்கு சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒய்ஜிபி கூப்பிட்டதால், அவங்க ரூமுக்கு போனேன். ஏம்மா நீ எல்லாம் கியூவில் நிக்கலாமா? இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற, உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற, எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்குன்னு சொன்னார்.பல சீரியல்ல ஆக்ட் பண்ணியிருக்கேன், டிராமா, சினிமாவில் ஆக்ட் பண்ணியிருக்கேன். ஆனாலும் யாருகிட்டயும் போயி உதவி கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

இதையும் பாருங்க : வைரமுத்துவின் புதிய பாடல் வரியால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் – அப்படி என்ன எழுதி இருக்கார் பாருங்க ?

- Advertisement -

சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், நடந்தது என்ன? என்னுடைய மகளுக்கு அட்மிஷன் எல்லாம் ஆயிருச்சி. ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருந்தாள். ஒரு மாசத்துக்கு அப்புறம் மேடம் கூப்பிடறாங்கன்னு சொன்னாங்க. என் பொண்ணு சரியான வாண்டு, என்ன பண்ணிச்சோ, யார அடிச்சாளோ-ன்னு நினைச்சிக்கிட்டே ஸ்கூலுக்கு போனேன். அப்போ என்கிட்ட சொன்னாங்க, “நீ வருமானவரித் துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு. நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.

வருமான வரித்துறை சேர்மனை நீங்க மீட் பண்ணியிருக்கிறீர்களா?ன்னு கேட்டாங்க. “ஓ, நல்லா தெரியுமே, அவரை பார்த்து தான் அப்ரூவலே வாங்கி இருக்கோம். ஒவ்வொரு வாரமும் ஸ்டோரி எல்லாம் அவர் தான் கிளியர் பண்ணணும்”னு சொன்னேன். அவர்கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரமாட்டேங்கிறார். கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம். ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம்.

-விளம்பரம்-

சட்டப்படி அது தப்பு போல இருக்கு அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க. அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்”என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

குட்டிபத்மினியின் இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகிபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் PSBB பள்ளி குறித்து ட்வீட் ஒன்றை ட்வீட் ஒன்றை போட்டுள்ள குட்டி பத்மினி, நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும் என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement