மீண்டும் இப்படி ஆகிடீங்களே, தன் தொப்பை பிடித்து காட்டி லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ.

0
1159
lakshmi
- Advertisement -

சமீபத்தில் உடல் எடையை குறைத்த நடிகை லட்சுமி மேனன் தற்போது மீண்டும் உடல் எடை கூடி இருகிறார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் பற்றி சர்ச்சை கருத்து :

நடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இவர் கடந்த பிக் பாஸ் 4ல் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார். அதில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை நான் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ மற்றவர்களுக்காக கழிவறை கைகழுவவோ எப்போதும் மாட்டேன்.

திட்டி தீர்த்த ரசிகர்கள் :

அதேபோல நிகழ்ச்சி என்ற பெயரில் கேமராவுக்கு முன்னால் சண்டை போடவும் மாட்டேன்.இந்த குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று யாரும் என்னிடம் பேச்சை எடுத்து வராதீர்கள் என்று கூறியிருக்கிறார். லட்சுமி மேனனின் இந்த கருத்து ரசிகர்களை கொஞ்சம் கோபமாகியுள்ளது. பிக் பாஸில் கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரர் விருப்பம். ஆனால், அதை சொல்லும் முறை என்று இருக்கிறது என்று பலரும் திட்டி தீர்த்து வந்தனர்.

-விளம்பரம்-

உடல் எடை குறைப்பு :

தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் லட்சுமி மேனனின் சில லேட்டஸ்ட் புகைடபங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் பேசுகையில், ‘‘எப்படி ஸ்லிம் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. நிறைய டான்ஸ் பண்ணினேன்.

மீண்டும் எடை போட்ட லட்சுமி மேனன் :

ஆனா, எடை குறைக்கணும்கிறதுக்காக டான்ஸ் பண்ணல. அதுவா குறைஞ்சுடுச்சு. எப்போவுமே நல்லா சாப்பிடுவேன். அதுல எந்தக் குறையும் வச்சது இல்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தனக்கு தொப்பை வந்திருப்பதை காட்டி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் மீண்டும் இப்படி ஆகிட்டிங்களா என்று கமன்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement