நீண்ட மாதங்களுக்கு பின் விஷாலின் திருமணம் குறித்து பேசியுள்ள லட்சுமி மேனன்.

0
2885
vishal
- Advertisement -

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தமும் கடந்த ஆண்டே நடைபெற்றது. விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது விஷால் திருமணம் நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டிற்கு மேல் ஆன நிலையில் விஷால் திருமணம் பற்றி எந்த தகவலும் வெளியாகிவில்லை. இந்த நிலையில் விஷாலுடன் காதல் கிசுகிசுவில் இணைத்து பேசப்பட்ட லட்சுமி மேனன் விஷால் திருமணம் குறித்து பேசியுள்ளார். நடிகை லட்சுமி மேனன், விஷலுடன் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனனிடம் தமிழ் சினிமாவில் தற்போது யுடன் இன்னும் நட்பில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, “எப்போதாவது விஷால்கிட்ட மெசேஜ்ல பேசுவேன். வேற யார்கூடவும் பெருசா பேசல. விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்கு. கல்யாணத்துக்குச் சொன்னார்னா போவேன். அப்போ இருக்குற சூழலைப் பொறுத்து. என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement